பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை
English Version

 

பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை
பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வரலாறு
Rev. Fr. Joseph Kottur

ஆலயவரலாற்றின் - தொடக்கம்:

இந்த ஆலயத்தின் தாய் பங்கு புனித பல்லாவரம் பிரான்சிஸ் சேவியர் ஆலயம். 1965ஆம் ஆண்டு அருட்தந்தை ஜோசப் கோட்டூர் பங்குதந்தை யய் இருக்கும்போது அவர் பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னைக்கு ஆலயம் கட்ட இடம் வாங்கினர். தாழ்மையான தொடக்கமாய், ஒரு சிறிய குடிசையில் பிரார்த்தனை சேவை தொடங்கியது. ஜூன் 30 1971 ஆம் ஆண்டு சென்னை மயிலை பேராயர் மேதகு Dr. அருள்ளப்பாவாள் ஆலயம் கட்ட அடிக்கள் நாடபட்டது. பின்பு அருட்தந்தை ஜோசப் கோட்டூர் ஒரு சிறு அலயம் கட்டினார். மாதம் ஒரு திருப்பலி சேவையை புனித அன்னையின் நினைவாக இங்கே அருட்தந்தை சாகோ நிறைவேற்றி வந்தார்.

புதிய ஆலயம்:

Opening Ceremony
Alter of Church

1976 ஆம் ஆண்டில், இந்த ஆலயத்தில் சுமார் 25 குடும்பங்கள் இருந்தன. வாரந்தோறும் பல்லாவரம் பங்குதந்தை அருட்தந்தை செபாஸ்டியன் அடிகளார் திருப்பலி நிறைவேற்றிவந்தார். நாட்கள் நகர "பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னையின்" பரிந்துறையை நாடிவரும் பக்த்தர்கள் அதிகமாய் இருந்ததாள் அருட்தந்தை செபாஸ்டியன் அடிகளார் ஆலயம் கட்ட முடிவு செய்தார். அதன்படி 15 ம் தேதி ஆகஸ்ட் மாதம், 1990 வருடம் ஒரு புதிய ஆலயம் கட்ட அடிக்கள் நாட்டினார். ஆகஸ்ட் 15 ஆம் நாள், 1993 ஆண்டு அன்று சென்னை மயிலை பேராயர் மேதகு Dr. கஸ்மிர் ஆன்டகையால் ஆலயம் அட்சித்து திறக்கப்பட்டது. அதன்பின் எல்லா ஞாயிறுகிழமைகளிள், ஈஸ்டர், கிறிஸ்துமஸ் மற்றும் மாதாவின் மோட்ச ஆரோப நாட்கள்ளிள் அருட்தந்தை ஜான் பிரிட்டோவாள் திருப்பலி கொண்டாடப்பட்டது.

புதிய பங்கு:

Outline view of Church

2000 ஆம் ஆண்டில், பொழிச்சலூர் ஒரு புதிய பங்காக முறைபடி அறிவிக்கப்பட்டது. அப்போது பல்லாவரம் பங்குதந்தையாக அருட்தந்தை பேட்ரிக் அடிகளார் இருந்தார். சென்னை மயிலை ஆயர் மேதகு Dr. லாரன்ஸ் பையஸ் முன்னிலையில் ஆண்டவரின் திரு இரத்த சபை குருக்களிடம் ஆலய பொருப்புகள் ஒப்படைக்கபட்டது. அப்போழுது பங்கில் சுமார் 450 குடும்பங்கள் இருந்தன. 2002 ஆம் ஆண்டு பொழிச்சலூர் ஆலயம் செங்கல்பட்டு உயர்மறை மாவட்டதின் கிழ் வந்தது.


 

 

பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பங்கு குருக்கள் விவரம்:

பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பணியாட்றிய இயேசுவின் திரு இரத்த சபை குருக்களின் விவரம்,

பங்குகுருவின் பெயர்
துணைய். பங்குகுருவின் பெயர்
சேவை காலம்
சேவை பற்றிய விவரங்கள்
அருட்தந்தை. பால்ராஜ் அருட்தந்தை. ஜெரால்ட் இருதியராஜ்
2000 - 2005

இவர் இயேசுவின் திரு இரத்த சபையின் முதல் பங்குக்குரு. இவர்ருடைய பணிகாலத்தில் புனித லூர்து அன்னையின் கேபி கட்டப்பட்டு, செங்கல்பட்டு உயர்மறை மாவட்டதின் ஆயர் மேதகு Dr. நிதிநாதணல் ஆசீர்வதித்து 07 ஆகஸ்ட் 2003 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இவர் பணிகாலத்தில் குழந்தை இயேசு கேபி கட்டப்பட்டு 08 செப் 2004 அன்று அருட்தந்தை. அந்தோணிசாமியால் அட்சித்து திறிந்து வெக்கபட்டது.
அருட்தந்தை. ஜான் பாப்டிஸ்ட் அருட்தந்தை. பாலசுந்தரம்
2006 – 2009
இவர்ருடைய பணிகாலத்தில் சமூகம் நலகுடம் கட்டப்பட்டது, மேலும் பலிபிடத்தின் அமைப்பு மாற்றி அமைக்கபட்டு, செங்கல்பட்டு உயர்மறை மாவட்டதின் ஆயர் மேதகு Dr. நிதிநாதணல் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
அருட்தந்தை. போஸ்கோ அருட்தந்தை. அமலநாதன்
2009 - 2011
அருட்தந்தை. போஸ்கோ அவர்கள் சட்டம் பயின்றவர், அவர் 2009 ஆம் ஆண்டில் பங்குகுருவாய் பொறுப்பேற்ற பிறகு ஆலயத்துக்கு பெஞ்சுகள் செய்ய முயற்சி எடுத்தார்.
அருட்தந்தை. ஜெரால்ட் இருதியராஜ் அருட்தந்தை. அமலநாதன் & அருட்தந்தை. தங்கராஜ்
2011 - 2014
2011 ஆம் ஆண்டு அருட்தந்தை. ஜெரால்ட் இருதியராஜ் பங்குக்குருவாய் பொறுப்பேற்றபிறகு, பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் அடையால சின்னமாய் விலங்கும் கொடிமரத்தை நிருவினார்.
அருட்தந்தை. ஜே. வில்லியம்ஸ்


அருட்தந்தை. ஜே. வில்லியம்ஸ்
அருட்தந்தை. கிறிஸ்டோபர்
2014 – 2019

அருட்தந்தை ஜே. வில்லியம்ஸ் அவர்கள், 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு கிறிஸ்துவின் பாடுபட்ட சூருவத்தை அர்ப்பணித்தார்கள்.

அருட்தந்தை கிறிஸ்டோபர் , அருட்தந்தை அருண் பிரான்சிஸ் மற்றும் அருட்தந்தை பேட்ரிக் அவர்கள் துணைய். பங்குதந்தைாய் இந்த காலகட்டத்தில் பணியேற்றினர்கள்.

அருட்தந்தை. D.ஜெயசிங் டேவிட்


அருட்தந்தை. D. ஜெயசிங் டேவிட்., சி.பி.பி.எஸ்
அருட்பணி. பெர்னாண்ட்., சி.பி.பி.எஸ்
2019 – till date

அருட்பணி. D.ஜெயசிங் டேவிட் அவர்கள், 2019 ஆம் ஆண்டு பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்.பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை திருவிழா:

Chariot of Polichalur Arokia Annai
Kodimaram

பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29 முதல் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை நடைப் பெரும். திருவிழாவின் தொடக்கமாய் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருப்பலியும் கொண்டாடப்படும். திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அன்னையின் தேர்பவனியுடன் திருப்பலியும் நிறைவேட்றப்படும். செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்னையின் பிறந்தநாள் அன்று திருவிழா திருப்பலி கொண்டாடப்பட்டு பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னைக்கு தேர் எடுக்கபடும். முதலில் புனித மைக்கேல் சமண்னஸ் ஆனவரும் பின் புனித சூசையப்பரும் அதன்பின் பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை தாங்கிய திருதேர் பவனியாய் கொண்டுவரபடும். தேர்பவனி முடிந்தவுடன் நற்கருணை ஆசிரும் அன்னையின் கொடியறக்கம் நடைப்பெரும்.மற்ற நிகழ்வுகள்:

Eucharist

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு நோய்யாளிகளுக்கு நற்கருணை ஆசிருடன் சிறப்பு திருப்பலி நிறைவேட்றப்படுகிறது. வரும் அனைத்து பக்தர்களுக்கும் தனித்தனியாக ஜெபித்து திருன்னை புஸ்சபடுகிறது பின்பு அனைவருக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது. அன்று மாலை 06:30 மணிக்கு பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னைக்கு தேர் எடுக்கபட்டு ஜெபமாலையும் நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது. என்னற்ற மக்கள் மதம், மொழி, இனம் கடந்து பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையும், ஆசிறையும், அற்புத்ததையும், கடவுளின் அன்பையும் இங்கு வந்து பெற்று செல்கிறார்கள்.

இதுவரை பொழிச்சலூர் ஆலயம் மூன்று குருக்களையும், மூன்று அருட்சகோதரிகளை உருவாக்கி உள்ளது.


பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னையின் முலமாய் கடவுளின் அற்புதத்தை பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மரியே வாழ்க!.பங்கில் பணியாற்றும் பக்தசபைகள்:

  • மரியாயின் சேனை
  • பீடசிறுவர்கள் ஒருங்கிணையம்
  • இளைஞர் ஒருங்கிணையம்
  • தூய வின்சென்ட் தே பவுல் சபை
  • அன்பிய ஒருங்கிணையம்
  • திருவிழா வழிபாட்டு குழு
  • இயேசுவின் திரு இரத்த சபை ஒருங்கிணையம்
  • பங்கு அருட்பணி பேரவை

அன்பிய ஒருங்கிணையம்:

அன்பிய பெயர்
பிரதிநிதி
இருதய ஆண்டவர் அன்பியம் திரு. எஸ். தாஸ்
சகாய மாதா அன்பியம் திரு. ஆர். ஸ்டீபன்
பரிசுத்த ஆவி அன்பியம் திரு. பால் வின்சென்ட்
நல் ஆலோசனை மாதா அன்பியம் திரு. செல்வராஜ்
லூர்த் மாதா அன்பியம் திரு. ஜான் பால்
ஆரோக்கிய மாதா அன்பியம் திரு. டி. பீட்டர்
பாத்திமா மாதா அன்பியம் திரு. பி.வி. ஆண்டனி
விண்ணரசி மாதா அன்பியம் திரு. சி. ஆண்டனி கிளமெண்ட்
புனித அந்தோனியார் அன்பியம் திருமதி. சி டெய்ஸி
புனித பிரான்சிஸ் சேவியர் அன்பியம் திரு. ஆர். பீட்டர்
புனித சுசையப்பர் அன்பியம் திரு. எல். ஷனில் அருளப்ப
ஜெயராணி மாதா அன்பியம் திரு. சந்திர சேகர்
ஜெபமாலை மாதா அன்பியம் திரு. வின்சென்ட் ரவி
சேலத்த மாதா அன்பியம் திருமதி. லில்லி ஜான்சி
ஆறுதல்மாதா அன்பியம் திருமதி. ரீட்டா மேரி
அமலோற்பவ மாதா அன்பியம் திரு. ஆர். ஆண்டனி சுகந் ராஜா
அடைகள மாதா அன்பியம் திரு. பிபின்

அன்பிய பிரதிநிதிAnbiam List
Anbiam List

Anbiam List
Anbiam List


பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னையின் ஆசிர் உங்கலோடு இருப்பதாக !